துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்த அஜித்குமார் குழுவினருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த அஜித்குமார் குழுவினர் இன்னும் பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.