news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடக்கம்

முதல்வர் விஜய் உரை

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் மூலம் பேட்ரோல் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கியது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய், திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதல்வர் விஜய் வருகை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழாவிற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கு,
காவல்துறையினர் அணிவகுப்பு மாியாதை அளித்தனர். அணிவகுத்து சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பெண் காவலா்களுக்கு முதல்வர் விஜய் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் புழுதி பறக்கும் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை துவக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

இலட்சினை வெளியீடு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் இலட்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார். பெண் காவலா், சிங்க முகம் அடங்கிய இலட்சினையை முதல்வா் விஜய் வெளியிட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைவா் IG பவானீஸ்வாி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை செயல்பாடு தொடா்பான சிறப்பு காணொலி வெளியிடப்பட்டது
AI மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை சிறப்பு காணொலி பார்வையாளர்களை கவர்ந்தது.

கர்ஜனை, கம்பீரம்
தமிழ்நாடு முழுவதும் இயங்க உள்ள சிங்கப்பெண் அதிரடி படையினருக்கான ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய் அறிமுகம் செய்தாா். தொடர்ந்து,
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கென அறிமுகமான பிரத்யேக ரோந்து வாகனத்தை தானே இயக்கி, முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சி - விஜய் உரை
இந்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது;
ஒருசில நிகழ்ச்சிகள் மட்டும் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும், அப்படி ஒரு நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நினைக்கும் போது மனம் கலங்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதன்மை காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான், அதனை வேரோடு பிடுங்க வேண்டும்.

பயமின்றி நடமாட வேண்டும்
பல ஆண்டுகளாக வேரூன்றி உள்ள போதைப்பொருள் நடமாட்டத்திற்கு யாா் காரணம் என நமக்கு தொியும். பயமின்றி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட நடவடிக்கை எடுக்கவே இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.354 கோடி ஒதுக்கீடு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு என ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு படைக்காக 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட முடியாது; தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தடுக்கப்படும், அதே நேரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது. நம் வீட்டு பெண்களின் கண்ணியம் தான் நமது அரசின் முக்கிய கடமை. மாநிலத்தின் வெற்றி என்பது கட்டுமானம், பொருளாதாரத்தில் மட்டும் இல்லை, பெண்களின் பாதுகாப்பில் உள்ளது. அரசின் இலக்கு சாியாக இருந்தாலே செல்லும் பதை சாியானதாக இருக்கும்.

இந்தியாவில் முதன்முறையாக...
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக ட்ரோன் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் மூலம் பேட்ரோல் உருவாக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் உரை நிகழ்த்தினார்.

Related Link
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் உரை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் உரை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 23 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved