தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சரவை பட்டியலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவையில் கடந்த 28-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டு, 3 பேர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, 6 பேரின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய அமைச்சர்களான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையுடன் 19-வது இடமும், செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையுடன் 21-வது இடமும், கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறையுடன் 27-வது இடமும், நாசருக்கு சிறுபான்மை நலத்துறையுடன் 29-வது இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.