தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மாணவர்களை இன்னல்களுக்குள்ளாக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்களுக்கு போதிய உணவில்லை என நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுகளுக்கான நிதியை அரசு கால தாமதமாக வழங்குவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். போதிய உணவின்றி மைலாப்பூர் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் அல்லல்படுவதாகவும், பசியில் மாணவர்கள் வயிறெரிந்து விடும் சாபம் திமுக ஆட்சியை சுட்டெரிக்கும் எனவும் சாடியுள்ளார். சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளை போர்க்காலஅடிப்படையில் சீர் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.