ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமெரிக்க பயணத்தின்போது தாம் பெற்ற அனுபவங்கள் குறித்து தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "பார்ச்சூன் 500" எனப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனம் தம்மை வந்து முதலில் சந்தித்து, 1997-ல் சென்னை மாநகர மேயராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அந்நிறுவனத்தின் தலைவர் தம்மை வந்து சந்தித்த புகைப்படத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.மேலும், நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்துள்ளவர், உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள் கோலோச்சுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.