இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார். கடந்த 6 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.