மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு காணொலியில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்ற முதல்வர், மாணவர்களின் படிப்பிற்கான நிதியை கூட கொடுக்கமாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.