பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டாஸ்டாக் வருமானத்தை எப்படி பெருக்குவது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறி இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகவும், ஆளும் அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் கூறினார். நான்காண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடச் சொன்னால், முதல்வரிடம் பதிலில்லை என்று அவர் கூறினார்.