தமிழ்நாட்டில் சுமார் 19 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 7 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமையவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.