2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அனைத்து துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்றய தினம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சுகாதாரத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.