ரூபாய் நோட்டில் இந்தியையும் அழிப்பீர்களா என கேட்கும் அதிமேதாவிகள், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க தயங்குவது ஏன், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி திணிப்பால் தாய்மொழிகளை இழந்தவர்களின் நிலை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்பதே மொழிக்கொள்கை என குறிப்பிட்ட அவர், அன்று அண்ணா கேட்டதை இன்று தமிழ்நாடு கேட்கிறது என்றும், லட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.