இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இந்தியில் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தி பிக்பாஸிற்குள் நுழையும், முதல் தென்னிந்திய தமிழ் பெண் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கது.