காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எர்டோகன், அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிஃபை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், துருக்கி எப்போதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றார்.