ஆண் நண்பருடன் பேசியே ஆக வேண்டும் என நினைத்தால், ரூம் போட்டு பேசுங்கள் என்று, நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி, பலாத்காரத்திற்கு அந்த ஜோடியும் ஒரு காரணம், பேச்சுவார்த்தை நடத்திய தீர வேண்டும் என்றால் ரூம் போட்டு கூட பேசலாம் என்று சொல்லியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. "கோவை பாலியல் பலாத்காரத்திற்கு அந்த ஜோடியும் ஒரு காரணம். இந்த விவகாரத்தில், நான் காவல்துறையை குறை சொல்ல மாட்டேன். நான் ஒரு டீன் ஏஜ் சிறுமியின் தாய். அதனால் என் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கிறேன். காதல், கண்றாவி, வியாபாரம் உள்ளிட்ட எந்த காரணமாக இருந்தாலும், நேரம் கெட்ட நேரத்தில், தேவையில்லாத இடத்திற்கு செல்ல கூடாது. உங்களால் முடியவில்லை, பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்றால், ரூம் போட்டு கூட பேசிக் கொள்ளலாம். நான் மகன், மகளை பெற்ற தாயாக சொல்கிறேன். இங்கு சிங்கப்பூரை போல பாதுகாப்பு இல்லை. ஆண்களும் தேவையில்லாத நேரங்களில் வெளியில் செல்ல கூடாது. வாயை கட்டி, வயிற்றை கட்டி வளர்க்கிறோம். நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு. இதை பெண்ணியத்திற்கு எதிரானது என்றால் பெண்ணியமே வேண்டாம். படித்து பெரிய உத்யோகத்திற்கு செய்து சாதனை செய்வதை சுதந்திரம் என்று சொல்லுங்கள்.இவ்வாறு நடிகை கஸ்தூரி பேசினார். இதையும் பாருங்கள் - ரூம் போட்டு பேசுங்கள், கஸ்தூரி சர்ச்சை கருத்து | Actress Kasthuri Controversy Statement