தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன தொலைக்காட்சியின் மூலம் புத்தாண்டு வாழ்த்து கூறிய அவர், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான தாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.