முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலையிலேயே நடைகள் திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அனைத்து கோவில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.