மகளிர் டி20 உலகக் கோப்பையில இன்னைக்கு ரெண்டு போட்டிகள் நடக்க இருக்கு. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில நியூசிலாந்து அணிய எதிர்கொள்ள இருக்கு இந்திய அணி. இந்த போட்டி நடைபெற இருக்க துபாய் ஸ்டேடியத்தின் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமா இருக்கும்னு சொல்லப்படுது. நூழிலையில ஆசிய கோப்பைய தவறவிட்ட இந்திய அணி உலகக் கோப்பைய வெற்றியுடன் தொடங்குமாங்குற எதிர்பார்ப்புல இருக்காங்க ரசிகர்கள்.