வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்-ல் மணிக்கு 156.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் மயங்க் யாதவுக்கு இந்திய அணியில் முதன்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.