ரியோ நடித்துள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம், வரும் மார்ச் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பௌசி நடித்துள்ளனர்.