ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக சுவாமிகள் குண்டிச்சா கோவிலுக்குள் நுழையும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக சுவாமிகள் ஜெகந்நாதர், பலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோர் ஜெகந்நாதர் கோவிலில் இருந்து குண்டிச்சா கோவிலுக்கு பயணம் செய்தனர். இதையொட்டி, சுவாமிகளுக்கு புனித சடங்குகள் செய்யப்பட்டு ஆலய நுழைவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். இங்கு சுவாமிகள் 9 நாட்கள் தங்குவார்கள்.