ஆந்திரா... கணவன் - மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை. பெரியவர்கள் தலையிட்டும் நிற்காத சண்டை. தூங்கிக்கொண்டிருந்த மனைவியை உலக்கையால் அடித்தே கொலை செய்த கொடூர கணவன். தலைமறைவாக இருந்தவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போலீஸ். மனைவியை கணவனே அடித்து கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?ஆந்திராவுல உள்ள சிலகலூரிபேட்டை பகுதிய சேந்த சாலமன் - புஷ்பா தம்பதிக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. கல்யாணமான கொஞ்சம் நாட்கள் மட்டும் மனைவிய நல்லபடியா பாத்துக்கிட்ட கணவன், வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகிட்டான். அதுக்கப்புறம் சரியா வேலைக்கும் போகாம, எந்நேரமும் மது குடிச்சுட்டே வீட்டுக்கும் வந்துருக்கான். எதுக்கு இப்படி, டெய்லி குடிச்சுட்டு வந்து பிரச்னை பண்றிங்க, நீங்க இப்படி பண்ணிட்டு இருந்திங்கன்னா நம்ம குடும்பத்த பத்தி அக்கம் பக்கத்துல உள்ளவங்க என்ன நினைப்பாங்க, தயவு செஞ்சு இனிமே குடிக்காதிங்கன்னு சொல்லிருக்காங்க புஷ்பா. ஆனா மனைவி அட்வைஸ் பண்றத கேட்டு கடுப்பான கணவன், மனைவி புஷ்பாவ போட்டு சரமாரியா அடிச்சுருக்கான். சம்பாதிக்குற பணத்த கூட வீட்டு செலவுக்கு கொடுக்காம மனைவிய போட்டு சித்ரவதை பண்ணிருக்கான்.கொஞ்சம் நாளைக்கு முன்னாடி, ப்ரண்ட்ஸோட சேந்து மது குடிச்ச சாலமன், நைட்டு நேரத்துல வீட்டுக்கு திரும்பிருக்கான். அப்ப மனைவி புஷ்பா, தன்னோட தோழி கிட்ட ஃபோன் பேசிட்டு இருந்தாங்க. அத பாத்த சாலமன் இந்த நேரத்துல எவன் கிட்ட பேசிட்டு இருக்க, இப்பல்லாம் நீ போனும் கையுமா தான் இருக்க, உன் மேல எனக்கு சந்தேகமா இருக்குன்னு சொல்லி அடிச்சுருக்கான். அதுக்கு மனைவி, குடிச்சுட்டு வந்த என்ன அடிச்சுட்டு இருந்திங்க, இப்ப சந்தேகப்பட்டும் என்ன அடிக்க ஆரம்பிச்சுட்டிங்க, நீங்க இதே மாதிரி பண்ணிட்டு இருந்திங்கனா, நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்ருவேன், அதுக்கப்புறம் இங்க நான் வரவே மாட்டேன்னு சொல்லிருக்காங்க. இதனால கணவன் - மனைவிக்கு இடையில வார்த்தை போர் முட்டிருக்கு. சாலமனோட நடவடிக்கைய பத்தி, தன்னோட குடும்பத்துக்காரங்க கிட்ட சொல்லி புலம்பிருக்காங்க புஷ்பா. இதனால வீட்டு பெரியவங்க எல்லாரும் சாலமனுக்கு அறிவுரை சொல்லிருக்காங்க. ஆனா அப்பவும் திருந்தாத சாலமன், மனைவி மேல சந்தேகப்பட்டு டெய்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்துருக்கான். இந்த சந்தேகப் புத்தி தான் மனைவிய கொலை செய்யவும் தூண்டிருக்கு. சம்பவத்தன்னைக்கு மனைவி புஷ்பா வீட்ல தூங்கிட்டு இருந்தாங்க. அப்ப மதுபோதையில வீட்ல இருந்த உலக்கைய எடுத்த கணவன், மனைவி புஷ்பாவோட தலையிலையே ஓங்கி அடிச்சு கொன்னுட்டு அங்கருந்து தப்பிச்சு போய்ட்டான். ஆனா கிராம மக்கள் மூலமாக கொலையாளிய யாருன்னு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், சாலமன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.