மகாராஷ்டிரா... அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்த கணவன். திடீரென சைக்கோவாக மாறி, மனைவியையும், மகனையும் வெட்டிக் கொன்ற கொடூரம். தலைமறைவாக இருந்தவரை கஸ்டடியில எடுத்து விசாரித்த போலீஸ். கட்டிய மனைவியும், பெற்ற மகனும் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?அதிகாலை நேரம். ராகுல்-ங்குற நபரோட வீட்ல இருந்து திடீர்ன்னு அலறல் சத்தம் கேட்ருக்கு. சத்தத்த கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, ராகுலோட வீட்டுக்கு ஓடிப்போய் பாத்துருக்காங்க. அங்க ராகுலோட மனைவி ரூபாலியும், அவங்களோட 4 வயசு மகனும் ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. இதனால சம்பவ இடத்துக்கு போன போலீஸ் ரெண்டு சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து ரூபாலியவும், அவங்க மகனையும் கொலை செஞ்சது யாரு, உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதான்னு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கேட்ருக்காங்க போலீஸ். அதுக்கு ராகுலுக்கும் அவங்க மனைவி ரூபாலிக்கும் அடிக்கடி பிரச்னை வரும், அதனால எங்களுக்கு ராகுல் மேல தான் சந்தேகம் இருக்குதுன்னு சொல்லிருக்காங்க.இந்த தகவல வச்சு ராகுல் எங்க தப்பிச்சு போனாருன்னு தெரிஞ்சுக்க போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. அவரோட செல்போன் நம்பரையும் ட்ரேஸ் பண்ணி பாத்துருக்காங்க. அதுபடி அதே ஏரியாவுல பதுங்கியிருந்த ராகுல கஸ்டடியில எடுத்து போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சாங்க.மகாராஷ்டிரா, மெஹ்கர் நகர்ல உள்ள டீச்சர்ஸ் காலனிய சேந்த ராகுலுக்கு ரூபாலி-ங்குற மனைவியும் 4 வயசுல ஒரு மகனும் இருந்தாங்க. கல்யாணமான புதுசுல ராகுல் சொந்த கார் வச்சு, ஓட்டுநரா வேலை பாத்துட்டு இருந்தாரு. சமீபத்துல குடும்ப கஷ்டம் காரணமாக ராகுல் அந்த கார வித்துட்டதா கூறப்படுது. அதுக்கப்புறம் ராகுலும் வேற எந்த ஒரு வேலைக்கும் போகாம வீட்லையே சும்மா இருந்ததாக கூறப்படுது. இதனால கடுப்பான ராகுலோட மனைவி ரூபாலி கணவன திட்டிருக்காங்க. 4 வயசுல ஒரு மகன் இருக்கான், ஏதாவது ஒரு வேலைக்கு போனா தான், பையனோட படிப்பு செலவ பாக்க முடியும், ஆனா எத பத்தியும் யோசிக்காம நீங்க வீட்லையே இருக்குறது நல்லா இல்லன்னு சொல்லி திட்டிருக்காங்க. இதுக்கிடையில மனைவி ரூபாலி, செல்போனுக்கு அடிக்கட் ஆகிருக்காங்க. எந்நேரமும் வாட்ஸ் அப், இன்ஸ்டா, பேஸ்புக்ல ரீல்ஸ் பாத்துட்டே இருந்துருக்காங்க.கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராகுல் வேலை விஷயமா வெளியில போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு. அப்ப ரூபாலி யார் கிட்டயோ ஃபோன் பேசிட்டு இருந்ததா சொல்லப்படுது. இதனால ஆத்திரமடைஞ்ச கணவன், யார் கிட்ட பேசிட்டு இருக்க, இப்பெல்லாம் நீ சரியில்ல, உன்னோட நடவடிக்கையில ரொம்ப மாற்றம் இருக்கு, யாரு கூடயாவது தொடர்புல இருக்கியான்னு கேட்ருக்காரு. இத கேட்டு கடுப்பான மனைவி, நான் எங்க அம்மா கூட தான் ஃபோன்ல பேசிட்டு இருந்தேன், நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது, தேவையில்லாம என் மேல சந்தேகப்படாதிங்கன்னு சொல்லிருக்காங்க. ஆனா அத நம்பாத கணவன் மனைவியோட செல்போன பிடுங்கி எல்லாத்தையும் செக் பண்ணி, மனைவிய போட்டு சித்ரவதை பண்ணிருக்காரு. இதனால கணவன் - மனைவிக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு.கணவனோட பேச்ச கேட்டு ஆத்திரமடைஞ்ச மனைவி, வேலை வெட்டிக்கு போகாத நீ, இனிமே என்ன கேள்வி கேட்குற வேலைய வச்சுக்காத, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ஏதாவது ஒரு வேலைக்கு போ, அப்படி இல்லன்னா என் மகன கூப்டுட்டு எங்க அம்மா வீட்டுக்கு போய்ருவேன்னு சொல்லிருக்காங்க. இதனால மனைவி ரூபாலிய ராகுல் சரமாரியா அடிச்சுருக்கான். அடுத்து வீட்டுக்கு வெளியில கிடந்த கோடாரிய எடுத்துட்டு வந்த ராகுல், மனைவி ரூபாலியோட முகம், வயிற்றுலையும் வெட்டிருக்கான். இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த ரூபாலி உயிரிழந்துட்டாங்க. மனைவி ரத்த வெள்ளத்துல கிடந்தத பாத்து சைக்கோவான ராகுல் தன்னோட 4 வயசு மகனையும் கோடாரியால வெட்டிக் கொன்னுட்டு, அங்கருந்து தப்பிச்சு போய்ட்டான். ஆனா செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி ராகுலை கண்டுபிடிச்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி கம்பி எண்ண வச்சுருக்காங்க.