இரண்டு மாத குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்த தம்பதி. உருட்டு கட்டை, பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கிராம மக்கள். குழந்தை மற்றும் தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திய பயங்கரம். கரிக்கட்டையாக கிடந்த இருவரின் உடல்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள். தாயையும், குழந்தையையும் எரித்து கொலை செய்யும் அளவிற்கு அப்படி என்ன வன்மம்? நள்ளிரவில் நடந்தது என்ன? * நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு வந்த நபர்* அழுது கொண்டே வந்த நபரிடம் போலீஸ் விசாரணை* "எனது மனைவியையும், குழந்தையையும் எரித்துவிட்டனர்"எந்நேரமும் பரபரப்பா இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு 40 வயசான ஒருத்தரு மூச்சு வாங்கியபடி ஓடி வந்துருக்காரு. ஒடம்பு முழுக்க பெட்ரோல் வாசன, கண்கள் முழுக்க கண்ணீர்னு வந்தவர பாத்த போலீஸ்காரங்க, என்ன ஆச்சு? எதுக்காக இப்படி ஓடி வர்றீங்கன்னு கேட்டுருக்காங்க. அதுக்கு, அந்த நபர், சொன்ன விஷயத்த கேட்டு அங்க இருந்த போலீஸ்காரங்களே ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி நின்னுருக்காங்க. ஏன்னா, அவரோட மனைவியையும், குழந்தையையும் கிராம மக்கள் எல்லாரும் ஒன்னா சேந்து உயிரோட கொளுத்துனதுதான் அந்த அதிர்ச்சிக்கே காரணம்.* கலையா என்ற கிராமத்தில் வசித்த சின்கு-ஜோதி தம்பதி* அடிக்கடி வீட்டில் பூஜை செய்து வந்த ஜோதிஜார்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்துல கலையா-ங்குற சின்ன கிராமம் இருக்கு. இந்த கிராமத்துல மொத்தமே 20ல இருந்து 40 வீடுகள்தான் இருக்கு. அதுல ஒரு வீட்டுலதான் சின்கு - ஜோதிங்குற தம்பதி தங்களோட ரெண்டு மாச குழந்தையோட வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. ஜோதி ஆன்மீகத்துல அதிக நம்பிக்கை கொண்டவங்க. அடிக்கடி வீட்டுல ஏதாவது பூஜை பண்ணிட்டே இருந்துருக்காங்க. ஜோதி வீட்டுல இரவு, பகலுன்னு எப்பவும் சாம்பிராணி வாசமும், வினோதமான சத்தங்களும் வந்துட்டே இருந்துருக்கு. அவங்க வீட்டுல பூஜை நடந்துச்சுன்னா, அதுக்கு மறுநாள் அந்த கிராமத்துல யாராச்சும் செத்து போய்டுவாங்கன்னு சொல்லப்படுது. * கிராமத்தில் அடிக்கடி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள்* ஜோதி செய்யும் பூஜையால் உயிரிழப்பு ஏற்படுவதாக சந்தேகம்* ஜோதி பில்லி சூனியம் செய்வதாக நினைத்த கிராம மக்கள்கிராமத்துல உள்ள ஒரு வீட்டுல யாராச்சும் உயிரிழந்தாங்கனா, அவங்களுக்கு காரியம் நடக்குற அன்னக்கு, இன்னொரு வீட்டுல இருக்குறவங்க யாராச்சும் உயிரிழந்துடுவாங்களாம். இப்படியே, கிராமத்துல உள்ளவங்களோட வீட்டுல யாராவது உயிரிழக்குற சம்பவம் நடந்துட்டே இருந்துருக்கு. அதனால, கிராமமே சோகத்துல மூழ்கிருக்கு. என்ன நடக்குது? நல்லா இருக்குறவங்களும் திடீர்னு செத்துடுறாங்க, அப்ப நம்ம கிராமத்துக்கு யாரவது செய்வினை பண்ணிட்டாங்களானு கிராமமக்கள் யோசிச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல, ஜோதி வீட்டுல மட்டும் எல்லாரும் வழக்கம்போல ஆரோக்கியமாவும், சந்தோஷமாவும் இருந்துருக்காங்க. இது, ஊர் மக்களுக்கு கண்ண உறுத்திருக்குது. Related Link வீட்டில் தனியாக இருந்த பெண் IT ஊழியர் * ஜோதி வீட்டின் முன்பு சென்று எச்சரிக்கை விடுத்த மக்கள்* தான் செய்வினை செய்யவில்லை எனக்கூறிய ஜோதி* ஜோதி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த மக்கள்கிராமத்துல எல்லார் வீட்டுலையும் துக்க சம்பவம் நடக்குது. ஆனா, ஜோதி வீட்டுல மட்டும் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. அதுமட்டுமில்லாம, ஜோதி பூஜைங்குற பேர்ல பில்லி சூனியம் பண்ணி, கிராமத்துல உள்ள எல்லாருக்கும் செய்வினை செஞ்சிருக்காங்க, அதனால தான் அவங்க குடும்பத்த தவற மத்த எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையும், துக்க நிகழ்வுகளும் அடிக்கடி வந்துட்டே இருக்குனு நினச்சுருக்காங்க கிராம மக்கள். இதனால, செய்வினைய பத்தி ஜோதி, குடும்பத்துக்கிட்ட கேட்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டையும் போட்டுருக்காங்க. ஒரு நிமிஷம் கூட நீங்க யாரும் இந்த ஊர்ல இருக்கக்கூடாது. பெட்டி படுக்கையெல்லாம் தூக்கிக்கிட்டு கண்காணாத இடத்துக்கு ஓடிருங்க, இல்லனா உங்க குடும்பத்தையே உயிரோட தீ வச்சு எரிச்சிடுவோம்னு எச்சரிச்சிருக்காங்க.* தெய்வங்களை மட்டுமே வழிபடுகிறேன் - ஜோதி* ஜோதி குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கிராம மக்கள்* 2 மாத குழந்தையுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஜோதிஎங்கள எதுக்காக ஊர விட்டு போக சொல்றீங்க? எங்க வீட்டுல பூஜை பண்ணி சாமிதான் கும்பிடுறோம், மத்தபடி இந்த செய்வினை, பில்லி சூனியம்லாம் எங்களுக்கு தெரியாது, நாங்க எந்த தப்புமே பண்ணலையேன்னு சொல்லிருக்காங்க ஜோதி. ஆனா, அவரு சொன்னத எதையும் கிராம மக்கள் காது கொடுத்து கேக்கல. ஜோதியும் அந்த கிராமத்துல இருந்து வேற எங்கையும் போகல. ஜோதி குடும்பத்த இப்படியே சும்மா விட்டோம்னா மாறி மாறி கிராமத்துல, யாராச்சும் உயிரிழந்துட்டேதான் இருப்பாங்க. அதுக்கு, ஒரு முடிவு கட்டியே ஆகணும்னு முடிவு பண்ண கிராம மக்கள், ஜோதி குடும்பத்த தீ வச்சு எரிக்க திட்டம் போட்டுருக்காங்க. * அத்துமீறி ஜோதி வீட்டிற்குள் நுழைந்த கிராம மக்கள் * 2 மாத குழந்தை, தாய் ஜோதியை எரித்து கொன்ற கொடூரம்* கிராம மக்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைசம்பவத்தன்னைக்கு, நைட்டு ஜோதியும், சின்கும் ரெண்டு மாச குழந்தையோட தூங்கிட்டு இருந்துருக்காங்க. அப்போ, கிராம மக்கள் எல்லாரும் ஒன்னுகூடி சின்கோட வீட்டுக்குள்ள புகுந்து ஜோதி மேலயும், அவரோட ரெண்டு மாச குழந்தை மேலயும் பெட்ரோல் ஊத்தி உயிரோட தீ வச்சு கொளுத்திருக்காங்க. மனைவியையும், குழந்தையையும் காப்பாத்துறதுக்காக எவ்வளவோ முயற்சி பண்ணாரு. ஆனா, அவரால ரெண்டு பேரையும் காப்பாத்த முடியல. மூடநம்பிக்கையால குடும்பத்தையே தீ வச்சு எரிச்ச கும்பல்கிட்ட இருந்து தப்பிச்ச சின்கு, போலீஸ்ல சொல்லிருக்காரு. அவரு சொன்னத வச்சு போலீஸ்காரங்க ஸ்பாட்டுக்கு வந்து பாத்தப்ப, ஜோதியும் ரெண்டு மாச குழந்தையும் கரிக்கட்டையா கிடந்துருந்துருக்காங்க. அடுத்து, இது சம்பந்தமா வழக்குப்பதிவு செஞ்ச போலீஸார் தீவிரமா விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link தண்ணீர் டிரம்மிற்குள் கிடந்த சடலம்