நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.