சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில் 137 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஜாஸ் பட்லரை பின்னுக்கு தள்ளி 139 சிக்சர்களுடன் 4வது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் முன்னேறினார். இப்பட்டியலில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.