கேரள திரையுலகில் சூப்பர் ஹிட் அடித்த 'துடரும்' திரைப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தியை அழைத்து நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் பாராட்டியுள்ளனர். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்துள்ளது.