Also Watch
Read this
ஷங்கரின் கனவு படத்தில் சூர்யா - விக்ரம்.. மரண மாஸ் சம்பவம் காத்திருக்கு
ஷங்கரின் படத்தில் சூர்யா - விக்ரம்
Updated: Sep 28, 2024 02:26 PM
'வேள்பாரி' நாவலை படமாக்கும் பணிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்து மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'பிதாமகன்' படத்திற்கு பின் சூர்யா, விக்ரம் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்து பிரபலமானவராக திகழ்பவர் ஷங்கர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரது இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் வெளியானது. ஆனால் இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்நிலையில் ஷங்கரின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எழுத்தாளரும், மதுரை மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' என்ற நாவலின் காப்புரிமையை வாங்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். தமிழ் வாசகர்களை பெரிதும் கவர்ந்த இந்த வரலாற்று புதினத்தை படமாக இயக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார்.
'வேள்பாரி' ஷங்கரின் கனவுப்படம் என்றே கூறலாம். இதனிடையில் இந்த நாவலில் இடம்பெற்ற காட்சிகளை சில படங்களில் பயன்படுத்தி வருகின்றர். இதனால் அப்செட்டான ஷங்கர் 'வேள்பாரி' நாவலில் இடம்பெற்றுள்ள காட்சிகளை படங்களில் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் 'வேள்பாரி' படத்தினை சீக்கிரமே இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிக்க சீயான் விக்ரம், சூர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'பிதாமகன்' படத்தில் இவர்களின் காம்போ பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் 'வேள்பாரி' படத்தில் இவர்கள் இணைந்தால் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படத்தில் ரன்வீர் சிங், யாஷ் நடிப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் தமிழ் நடிகர்களை வைத்தே வேள்பாரியை இயக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் தற்போது கேம் சேஞ்சர், இந்தியன் 3 படங்களின் பணிகளில் அடுத்தடுத்து ஈடுபட இருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து 'வேள்பாரி' நாவலை படமாக்கும் வேலைகளில் ஷங்கர் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved