நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வாக வெளியிடப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் ரெய்னா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது டிவி தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.