இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை சுரேஷ் ரெய்னா அவருடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.