மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முதல்படி என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டமன்ற ஜனநாயக உரிமைகளையும் கூட்டாட்சியையும் நிலைநிறுத்தும் என பினராயி விஜயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.