கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தும் வரை திரைப்படத்தை வெளியிடக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு தெரிவித்திருந்தது.