மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு, 10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும், வழக்கு தொடர்பாக பொதுதளத்தில் பேசக்கூடாது, கீழமை நீதிமன்றத்தில் விலக்கு அளிக்காத பட்சத்தில் வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினர். சிபிஐயின் கைது நடவடிக்கை தேவையற்றது எனவும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் இருந்தவரை சிபிஐ கைது செய்தது நீதியை கேலி கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பதோடு, கூண்டில் அடைக்கப்பட்ட கிளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.