ரஷ்ய ராணுவத்தை ஆதரித்ததாக இந்தியாவைச் சோ்ந்த 19 நிறுவனங்கள் உள்பட 17 நாடுகளின் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தியா, சீனா, ஸ்விட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் ராணுவத்துக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.