சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கியுள்ள நாசா விஞ்ஞானியான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்க சென்ற SPACEX-ன் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து அதனுடன் வெற்றிகரமாக இணைந்து கொண்டது. இந்த இருவர் மற்றும் ஓர் விண்வெளி வீரரை மீட்பதற்காக SPACEX-ன் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சென்ற நான்கு விணவெளி ஆராய்ச்சியாளர்கள் டிராகன் விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்த காட்சியை நாஸா வெளியிட்டுள்ளது.