விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டு அழைத்து வருவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 12ஆம் தேதி ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.