விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. ராக்கெட் ஏவுதளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் நாளை அதிகாலை ராக்கெட் விண்ணில் ஏவப்படலாம் எனவும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.