சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள "கேங்கர்ஸ்" திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்த சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் திரைப்படத்தில் கேத்தரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.