நடிகை நயன்தாரா - சுந்தர்.சி் கூட்டணியில், மூக்குத்தி அம்மன் 2-ன் போஸ்டர் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, வெற்றியும் பெற்றது.அம்மன் வேடத்தில் நடித்த நடிகை நயன்தாராவின் புடவைகள் பெரியளவில் பேசப்பட்டது. தற்போது, மூக்குத்தி அம்மன்- 2 திரைப்படத்தை நயன்தாராவை வைத்து சுந்தர் சி பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியான நிலையில், அதனை நடிகை நயன்தாரா பகிர்ந்துள்ளார். சுந்தர் சி-யின் அரண்மனை வரிசையில் வந்த படங்கள் ஹிட் அடித்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2க்கு சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட் என கூறப்படுகிறது. சுந்தர்.சி.யின் இயக்கம் என்பதால், அவரது ஸ்டைலில் படம் இருக்கும் என்பதால், ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள், நயன்தாராவையும், அவரோட புதுப்புது புடவைகளையும் ரசிக்க தயாராக உள்ளனர்.