தலைநகர் சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மதுரை உட்பட தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நகரங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில், கோவை மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரியும், தர்மபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 102.2 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. தவிர, ஈரோடு மற்றும் மதுரை நகரத்தில் 103.28 டிகிரியும், சேலத்தில் 103.64 டிகிரியும், திருச்சியில் 102.02 டிகிரியும், வேலூரில் 103.46 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 102.56° டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.