நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்க உள்ளதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.ஊட்டி ரோஜா பூங்காவில் 10 முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும், கூடலூரில் 9, 11 தேதிகளில் 11-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சியும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 16 முதல் 21-ம் தேதி வரை சர்வதேச புகழ்பெற்ற 127-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 23 மற்றும் 25-ந் தேதிகளில் 65-வது பழக்கண்காட்சியும் நடைபெறுகிறது. மேலும் இந்த ஆண்டு புதிய வரவாக மழை பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.