மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் அதிவிரைவு ரயிலில் தீ விபத்து காரணமாக புகை வெளியேறியதால் பயணிகள், ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கழிவறையில் பீடி அல்லது சிகரெட் துண்டை வீசிய நபரால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.