இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் டெங்கு வீரியம் குறித்தான ஆய்வுகள் அடுத்த 2 நாட்களில் துவங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 64 பேரும், 2017ல் 65 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.மேலும், கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு வீரியமிக்க டெங்குவாக பரவி வருகிறது எனவே டெங்கு குறித்த ஆராய்ச்சி அவசியமான ஒன்று என கூறினார்.