செர்பியா அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகரில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்தேறி இருப்பதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.