பிளஸ்-2 தேர்வு கால அட்டவணையை அமைச்சர் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26ஆம் தேதி நிறைவடைய உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். செய்முறை தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை02.03.2026 - தமிழ், இதர மொழிப்பாடம்05.03.2026 - ஆங்கிலம்09.03.2026 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்13.03.2026 - இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்17.03.2026 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங்23.03.2026 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.26.03.2026 - Communicative English, நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்இதையும் பாருங்கள் - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு | 12th Exam Date | Public Exam Time Table