தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.27ஆம் தேதி வாக்கில் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளிப் புயலாக மேலும் தீவிரமடையலாம் எனவும் கணிப்பு.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவானது புதிய காற்றழுத்தம்.நாளை காலைக்குள் மேலும் வலுவடையலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல்.தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தகவல்.