எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று, தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை இன்று (செவ்வாய்கிழமை) புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவ காரணங்கள் நீங்கலாக வேறு எந்த விடுப்பையும் எடுக்க கூடாது என்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையும் பாருங்கள் - அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை | TN Govt | Chief Secretary | Government employees