ஜெர்மனியின் DUSSELDORF நகரில் நடைபெற்ற ஸ்ட்ரீட் கார்னிவல் நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் டிரம்பை கேலி செய்யும் விதமாக பல்வேறு உருவ பொம்மைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக ரஷ்யா அதிபர் புதினுடன் சேர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்கா அநீதி இழைப்பதாக குற்றஞ்சாட்டும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்த, உருவ பொம்மைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.