”அழகு மலர்” புயல் சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 27ஆம் தேதி உருவாகும் புயல், தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் மீண்டும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைக்க உத்தரவு:வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைத்திருக்க, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, பாராசிட்டமல், குளுக்கோஸ், உப்பு கரைசல், டாக்ஸி சைக்கிளின் போன்ற மருந்து பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தவும், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவ தேதி உள்ள பெண்கள் முன்கூட்டியே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.