போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் ஒரு புதிய சுங்க விதியை அறிமுகப்படுத்திய பின்னர் காசாவிற்கு உணவு விநியோகம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை மேம்படுத்தவில்லை என்றால் ராணுவ உதவியை நிறுத்துவதாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல், பாராசூட்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வீசப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.