தொடர் வீழ்ச்சியை சந்தித்து வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று தடாலடாடியாக மேலும் வீழ்ந்த தால் முதலீட்டாளர்களுக்கு ஏழு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகள் சரிந்து 78 ஆயிரத்து 602 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்குசந்தை நிப்டி 357 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 946 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் பங்குசந்தை வர்த்தகம் இந்த அளவுக்கு சரிந்துள்ளது. பொருளாதார நெருக்கடி இந்திய ரூபாயையும் விட்டுவைக்கவில்லை. அன்னிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 84 புள்ளி ஒன்று ஆக சரிந்துள்ளது.